இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Thursday, October 27th, 2016

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நவம்பர் 9–ந் திகதி தொடங்குகிறது. எஞ்சிய டெஸ்டுகள் முறையே விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்காளதேச தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் அப்படியே அணியில் இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச தொடர் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து அணி, இந்தியா வருகிறது.

தோள்பட்டை காயம் காரணமாக வங்காளதேச தொடரில் விளையாடாத முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முழுமையாக குணம் அடையாததால் அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும் அவர் அணியினருடன் பாதியில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி வருமாறு:– அலஸ்டயர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அன்சாரி, பேர்ஸ்டோ, ஜேக்பால், கேரி பேலன்ஸ், காரெத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் பின், ஹசீப் ஹமீது, அடில் ரஷித், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

anderson