இந்தியாவுக்கான இருபதுக்கு இருபது தொடருக்கான 20 வீரர்கள் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு
Tuesday, December 12th, 2017
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஒருநாள் தொடரில் மூத்த வீரர்களின் பங்களிப்போடு முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் 20 வீரர்கள் கொண்ட உத்தேச ரீ20 அணி விபரம் வெளியாகியுள்ளது, இதன்படி, இந்த அணியில் மூத்த வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங் மற்றும் சகலதுறை வீரர்களான ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
பாக்கிஸ்தானுடனான தொடரின் போது சோபிக்கத்தவறிய குசல் மென்டிஸ் இந்தியாவுடனான தொடரிலிருந்து முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
அணி விபரம்- திசார பெரேரா (தலைவர் ), உப்புல் தரங்க , தனுஷ்க குணதிலக, லஹிரு திரிமான்ன,மத்தியூஸ், சதீர சமரவிக்கிரம , தனஞ்சய டி சில்வா , துஷ்மந்த சமீர , சச்சித் பத்திரன , குசல் பெரேரா, லசித் மலிங்க ,ஜீவன் மெண்டிஸ் , தசுன் ஷானாக, அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, சதுரங்க டி சில்வா, அகில தனஞ்சய, நுவான் பிரதீப் ,இசுரு உதான,விஷ்வா பெர்னாண்டோ
கடைசி 15 வீரர்கள் கொண்ட அணியில் லசித் மலிங்க இணைக்கப்படுவார் என்பது சந்தேகமே
Related posts:
|
|