இந்தியாவில் ஆண்கள் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி!

Wednesday, July 26th, 2017

மகளிர் உலக சம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ளவுள்ள நிலையில், எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான ஆண்கள் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியும் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

மொஸ்கோவில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தின் நிறைவில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை 2019 ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலக  குத்துச்சண்டை சம்பியன்ஷிப் சொச்சியில் நடைபெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இரண்டாவது முறை எனினும் இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் ஆண்களுக்கான போட்டி இந்தியாவில்  நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மகளிர் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: