இந்தியாவிலும் இளஞ்சிவப்பு நிற பந்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடும் பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, இளஞ்சிவப்பு நிற பந்து இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு எடுபடுகிறது, சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா, வெப்பதட்ப நிலைக்கு ஒத்துவருமா என்பது குறித்து சோதித்து பார்க்கப்பட உள்ளது.
இதற்காக உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இம்முறை இத்தொடரில் அனைத்து முன்னணி வீரர்களும் பங்கேற்குமாறும், இளஞ்சிவப்பு நிற பந்தின் செயல்பாடு குறித்து அறிக்கை தருமாறும் பிசிசிஐ கோர உள்ளது.
Related posts:
பெரு கால்பந்தாட்ட அணித்தலைவருக்கு தடை..!
ஐசிசி இனால் குமார் தர்மசேனவுக்கு விருது!
கிண்ணத்தை வென்றது யூனியன் அணி!
|
|