இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து!

Thursday, July 11th, 2019

நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்திய அணியை தோற்கடித்து நியூசிலாந்து தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அந்த அணி 46.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

எனவே போட்டி நேற்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி தடைப்பட்ட இடத்தில் இருந்து நேற்று துடுப்பாடிய நியுசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது.

இதற்கமைய இம்முறை உலக கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக நியுசிலாந்து அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.


லாராவை முந்தினார் விராத் கோலி!
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து புயல் என வர்ணிக்கப்படும் மக்ஹாயா நிட்டினியின் வாரிசு  தென்னாபிரிக்க கி...
நியூஸிலாந்திற்கெதிரான பாக்கிஸ்தான் அணி விபரம்!
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்? 
உலகக் கிண்ணத் தொடர் - வெற்றிபெற்றது நியூசிலாந்து அணியே : நடுவர்களின் தீா்ப்பில் நடந்தது என்ன?