இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Tuesday, May 8th, 2018

அவுஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ளது

இதன் காரணமாக குறித்த டெஸ்ட் போட்டியை பகல் போட்டியாக நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டியை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் உத்தேசித்திருந்தது.

எனினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பதில் செயலாளர் அமிதாப் சௌத்திரி அவுஸ்திரேலிய கிரிக்கட்டின் தலைமை நிறைவேற்றாளர் ஜேம்ஸ் சதர்லேண்டுக்கு கடிதம் மூலம்  இந்தபோட்டியை பகல் இரவு போட்டியாக நடத்த மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பகல் இரவு போட்டியில் விளையாட தயாராகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: