இந்தியாவால் 700 கோடி இழப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Saturday, April 18th, 2020

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகை கிரிக்கெட் என்றாலும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

இதனால் ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்துவந்தது.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அதை நிறுத்தும் வரைக்கும் இரு நாடுகளுக்கிடையில் நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று இந்திய அரசு முடிவு எடுத்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாமல் உள்ளது.

இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி எடுத்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்களால் விளையாட முடியாது என்று பிசிசிஐ கைவிரித்து விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை டென்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிடிவி ஆகியவற்றிற்கு சுமார் 149 மில்லியன் டொலருக்கு கொடுத்திருந்தது. ஆனால் 2 டிவி நிறுவனங்களும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான 2 தொடர்களை நடத்தினால் தான் இந்தத் தொகையை தருவோம் என்று ஒப்பந்தத்தில் கூறியிருந்தன. தற்போது போட்டி நடைபெறாததால் 90 மில்லியன் டொலரை (இந்திய பண மதிப்பில் 688.40 கோடி ரூபாய்) குறைத்துள்ளன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பான்சர், டிக்கெட் விற்பனை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

Related posts: