இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்யை வென்றது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி !.

Saturday, April 6th, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சிவம் டுபே 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் எய்டன் மார்க்ரம் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: