இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Thursday, May 2nd, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில், அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: