இந்தியன் ப்ரீமியர் லீக் – மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி!

Wednesday, May 1st, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

000

Related posts: