இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்!

2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏல நடவடிக்கையில் இருந்து இலங்கை வீரர்களை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள தற்காலிக தடை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு காணப்படுகிறது என்ற அடிப்படையிலே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆலோசித்து தடை தொடர்பான நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.
இலங்கை வீரர்கள் பலர் இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை உரிய திகதிக்குள் நீக்கப்படாத நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது
000
Related posts:
|
|