இது போன்று வேறு அவுஸ்திரேலிய அணித்தலைவர்கள் செய்திருக்கார்களா? – ஜெயவர்த்தனே !

Saturday, August 27th, 2016

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் இடையில் விலகியது தொடர்பாக இலங்கையின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இழந்தது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, 2வது ஒருநாள் போட்டியில் தோற்றது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். டேவிட் வார்னர் மீதமுள்ள போட்டிகளுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக ஸ்மித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே டுவிட்டரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், ஒருநாள் தொடரின் பாதியிலே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராக சென்றிருப்பது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது. இது போன்று வேறு அவுஸ்திரேலிய அணித்தலைவர்கள் செய்திருக்கார்களா? என்று கேட்டுள்ளார்.

Related posts: