இது தான் எனது சிறந்த ஆட்டம்: பிராவோ !

Monday, April 9th, 2018

இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை என பிராவோ கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின.

இப்போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியை பெற்றது.

ஒரு கட்டத்தில் சென்னை அணி தோற்றுவிடும் என்ற நிலை இருந்த போது அதிரடி ஆட்டக்காரர் பிராவோ 30 பந்துகளில் குவித்த 68 ஓட்டங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தது.

போட்டிக்கு பின்னர் பேசிய பிராவோ, இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.

ஆகவே இப்போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்ததாகும். விக்கெட்கள் சரிந்த போதும் நான் இறுதிவரை களத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடிவும் என நம்பினேன்.

துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

Related posts: