இண்டியன் வெல்ஸ் கிண்ணத்தை கைப்பற்றினார் ரோஜர் ஃபெடரர்!

Tuesday, March 21st, 2017

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் சம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வெற்றி கொண்டுள்ளார்.

சர்வதேசத்தில் 9ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3ஆம் நிலை வீரரான ஸடேன் வொவ்ரிங்காவை 6 க்கு 4, 7 க்கு 5 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

35 வயதையுடைய ஃபெடரர் 7ஆவது முறையாக இன்டியன் வெல்ஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் 5 ஆவது முறையாக வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரோஜர் ஃபெடரர், தாம் இண்டியன் வெல்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதை நினைத்து பெருமையடைவதாக தெரவித்துள்ளார்.

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெட்லானா க்ஸெனட்சோவா மற்றும் எலெனா வெஸ்னினா ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 6 க்கு 7, 7 க்கு 5 மற்றும் 6 க்கு 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஸ்வெட்லானா க்ஸெனட்சோவாவை வீழ்த்தி எலெனா சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார்.

Related posts: