இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் – பெடரரிடம் வீழ்ந்தார் நடால்!

201703170519224246_Federer-beats-Nadal-to-reach-Indian-Wells-quarterfinals_SECVPF Saturday, March 18th, 2017

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், நடாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் ஃபெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார். ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச்சுற்றில் நடாலை வீழ்த்திய ஃபெடரர், இப்போது மீண்டும் அவரை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். இதுவரை நடாலுடன் 36 ஆட்டங்களில் மோதியுள்ள ஃபெடரர் 13-இல் மட்டுமே வென்றுள்ளார். எனினும் கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் ஃபெடரரே வாகை சூடியுள்ளார். ஃபெடரர் தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார். கிர்ஜியோஸ் தனது 4-ஆவது சுற்றில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கிறார் கிர்ஜியோஸ். ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 3-6, 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறார் வாவ்ரிங்கா. ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டொனால்டு யங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக மற்றொரு அமெரிக்க வீரரான ஜேக் சாக்கை எதிர்கொள்கிறார் நிஷிகோரி. ற்போதைய நிலையில் முன்னணி வீரர்களில் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-ஆவது சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில், இப்போது ஜோகோவிச், நடால் ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர். எனவே இந்தப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!