இடைநிறுத்தப்பட்ட கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிக்க திட்டம்.!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் இடைநிறுத்தப்பட்டும், பிற்போடப்பட்டும் உள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படாதுள்ள நிலையில், கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக ஜேர்மன் அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் பன்டெஸ்லிகா கால்பந்து பருவத்தை இந்த மாதத்தில் மீள ஆரம்பிக்கலாம் என அந்த நாட்டு தலைவரான சான்சலர் ஏங்கலா மேர்கல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, ஐரோப்பாவில் வழமைக்கு திரும்பும் முதலாவது மிகப்பெரிய கால்பந்து பருவமாக இது அமையவுள்ளது.
குறித்த பருவமானது எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை ஜேர்மன் கால்பந்து கழகம் இன்று தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து போட்டிகளும் மூடிய அரங்கில் பார்வையாளர்கள் அற்ற நிலையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
மெஸ்ஸி, ரொனால்டோவை ஊதி தள்ளிய கிரீஸ்மேன்!
கிரிக்கட் உலகை மீண்டும் திரும்பி பார்க்க வைத்த வீரர்!
இலங்கை அணி வெற்றி!
|
|