இங்கிலாந்தை வென்றது  நியூசிலாந்து !

Monday, February 26th, 2018

நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரின் முதலாது போட்டி இன்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொண்ட நியூசிலாந்து அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணிசார்பில் ஜோஸ் பட்லர் 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்ற வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 113 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்று கொடுத்தார். போட்டியின் சிறப்பாட்டகாரராகவும் ரோஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: