இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உலக கோப்பை தகுதி ஆட்டத்தில் சர்ச்சை!

Saturday, November 12th, 2016

உலக கால்பந்து விளையாட்டு நிர்வாக அமைப்பான ஃபிஃபாவின் தடையை மீறி, பாப்பி இலட்சினை அணிந்து, உலக கோப்பை கால்பந்து தகுதிசுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் விளையாடியுள்ளன.

நினைவுகூர்தல் நாள் எனப்படும் முதல் உலகப்போர் தொடக்கத்தில் இருந்தே காமன்வெல்த் நாடுகளில் கொல்லப்பட்ட அனைத்து படையினரையும் ஆண்டுதோறும் நினைவு கூர்கின்ற நாளை அடையாளப்படுத்தும் விதமாக பாப்பி இலட்சினை கை பட்டையில் அணிவதை இந்த அணிகள் வலியுத்தி இருந்தன.

இது அரசியல் சைகையாகிவிட்டது என்று ஃபிஃபா கூறியிருக்கிறது. இரு அணிகளுக்கும் அது புள்ளிகளை குறைக்கலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், பிரான்ஸூக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை தகுதிசுற்று ஆட்டத்திற்கு முன்னால் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓராண்டுக்கு முன்னர், பிரான்ஸ் தேசிய விளையாட்டு அரங்கிற்கு வெளியே நடைபெற்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதற்காக இந்த மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

_92411889_dcaa26f1-5588-44b0-8b04-ed722e8fc13f

Related posts: