இங்கிலாந்து புறப்பட்டது இலங்கை அணி!
Wednesday, June 9th, 2021இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணிக்குழாம் இன்று (09) அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமானது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.1507 என்ற விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (09) அதிகாலை 12.45 அளவில் அவர்கள் பயணமானதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இலங்கை அணி, இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இந்தத் தொடருக்கு, குசல் ஜனத் பெரேரா தலைமையிலான, இலங்கை அணிக்குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிரிக்கெற் என்ற பேச்சுக்கே இடமில்லை - பி.சி.சி.ஐ முடிவுக்கு கங்குலி ஆதரவு!
டெஸ்ட் தர வரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்!
இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல- இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா!
|
|