இங்கிலாந்து பிறீமியர் லீக்: யுனைட்டெட் வெற்றி!

Monday, September 26th, 2016

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், இடம்பெற்ற போட்டிகளில், தற்போதைய பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றியை மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்கடித்ததுடன், 2014/15 பருவகால சம்பியனான செல்சியை ஆர்சனல் தோற்கடித்திருந்தது.

மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றியை மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்கடித்திருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கிறிஸ் ஸ்மோலிங், ஜுவான் மாத்தா, மார்க்கஸ் ரஷ்போர்ட், போல் பொக்பா ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.

ஆர்சனல், செல்சி அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், செல்சியை ஆர்சனல் தோற்கடித்திருந்தது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸ் சந்தேஸ், தியோ வொல்கொட், மெசூட் ஒஸில் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.

மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அக்ரோ இரண்டு கோல்களையும், ரஹீம் ஸ்டேர்லிங் ஒரு கோலினையும் பெற்றனர்.

லிவர்பூல், ஹள் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 5-1 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, ஜேம்ஸ் மில்னர் இரண்டு கோல்களையும் அடம் லலானா, சடியோ மனே, பிலிப்பே கூத்தின்யோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 2-1 என்ற கோல் கணக்கில், மிடில்ஸ்பேர்க்கை டொட்டென்ஹாம் தோற்கடித்ததுடன், 1-0 என்ற கோல் கணக்கில், எவெர்ற்றனை போர்ண்மெத் தோற்கடித்ததுடன், 3-2 என்ற கோல்கணக்கில், சந்தர்லண்டை கிறிஸ்டல் பலஸ் தோற்கடித்திருந்தது. தவிர, வெஸ்ட் ப்ரோம், ஸ்டோக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இதன்படி, புள்ளிகள் தரவரிசையில், 18 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றி முதலிடத்திலும், 14 புள்ளிகளுடன் டொட்டென்ஹாம் இரண்டாமிடத்திலும் காணப்படுவதோடு, ஆர்சனல், லிவர்பூல், எவெர்ற்றன் ஆகியவை 13 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலடிப்படையில், மூன்றாமிடம், நான்காமிடம், ஐந்தாமிடம் வகிக்கின்றன.

article_1474800769-LEAD-1_25092016_GPI

Related posts: