இங்கிலாந்து பிராந்திய அணியில் விளையாடுகிறார் ஆமிர்!

Thursday, November 10th, 2016

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், இங்கிலாந்தின் பிராந்திய அணியான எசெக்ஸுக்கு விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என, அக்கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த பருவகாலத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவர், ஜூன் 19ஆம் திகதி முதல், அக்கழகத்துக்காக விளையாடவுள்ளார்.இங்கிலாந்தில் வைத்து ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனையும் கிரிக்கெட் தடையும் அனுபவித்த ஆமிர், அதன் பின்னர் இங்கிலாந்தில் போட்டிகளில் பங்குபற்றியுள்ள போதிலும், இங்கிலாந்தின் உள்ளூர்க் கழகமொன்றுக்காக விளையாடுவது, இதுவே முதற்தடவையாகும். எனவே, அவரை இரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பது, இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை.

article_1478698523-TamilAmir_09112016_GPI

Related posts: