இங்கிலாந்து உலக சாம்பியன்!

Sunday, October 29th, 2017

17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தியாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நடத்திய 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கிண்ணம் தொடர் நடைபெற்றது. இதில் சுமார் 24 சர்வதேச அணிகள் பங்கேற்றது.

இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் துவக்கம் முதலே ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.போட்டியின் முதல் பாதியின் 10,30வது நிமிடத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ கோமஸ் இரட்டை அடி கொடுத்தார்.இதற்கு இங்கிலாந்து அணியின் பிரிவெஸ்டர் (44வது நிமிடம்) பதிலடி கொடுத்தார். இதையடுத்து முதல் பாதியில் 2-1 என ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.பின்னர் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி வீரர்கள் எழுச்சி கண்டனர். அந்த அணிக்கு கிப்ஸ் ஒயிட் (58), போடன் (69,88) யுச்சி (84) என அடுத்ததடுத்து கோல் மழை பொழிந்தனர்.எவ்வளவு போராடியும் இதற்கு கடைசி வரை ஸ்பெயின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 5-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கிண்ணம் கால்பந்து தொடரில் ஸ்பபெயிடன் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்த்துக் கொண்டது.இப்போட்டியில் இங்கிலாந்து 5, ஸ்பெயின் 2 என மொத்தமாக 7 கோல்கள் அடித்தன. இதன்மூலம் உலகக்கிண்ணம் (17 வயது) அரங்கில் அதிக கோல் அடிக்கப்பட்ட பைனல் போட்டி என்ற புதிய சாதனை படைத்தது.முன்னதாக கடந்த 1995ல் நடந்த இறுதிப் போட்டியில் கானா 3 பிரேசில் 2 என மொத்தமாக 5 கோல்கள் அடித்தன.

Related posts: