இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!

Thursday, September 7th, 2023

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பாக சமரி அத்தப்பத்து 44 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2 – 1 எனும் அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

அத்துடன், கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: