இங்கிலாந்து அணியே மிகச் சிறந்த அணி – பிளின்டாஃப்!
Friday, October 6th, 2017
தற்போதுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியே மிகச் சிறந்த அணி என்று, முன்னாள் இங்கிலாந்தின் சகல துறை வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 28ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளது.இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணி குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், தற்போதுள்ள அணியே சிறந்த அணியாக இருப்பதாக பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.இந்தமுறை அவுஸ்திரேலியாவிற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் ஆண்ட்ரூ பிளின்டாஃப் உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
200 ஜி.பி சேமிப்புத்திறன் கொண்ட பென்டிரைவ்!
மீண்டும் களமிறங்கும் வோர்னர்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் இளம் வீராங்கனை எம்மா ராடுகானு!
|
|