இங்கிலாந்து அணியிலிருந்து இருவர் நீக்கம்!

இந்தியாவுக்கு எதிராக இலண்டன் லோர்ட்சில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
முதலாவது டெஸ்டில் ஓட்டங்களை தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை சகல துறை ஆட்டக்காரர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு பதிலாக 20 வயதான புதுமுக துடுப்பாட்ட வீரர் ஆலி போப் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி:
அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (தலைவர்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர்.
Related posts:
9 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசா்ஸ் வெற்றி!
தென்னாசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் இலங்கை இரண்டாமிடம்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெனறது சென்னை சுப்பர் கிங்ஸ்!
|
|