இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்பு மிக்க போட்டி இன்று!

Wednesday, August 1st, 2018

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இந்தியாவிற்கு எதிராக பேமிங்ஹாமில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்து 1877 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்த நிலையில், இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: