இங்கிலாந்துடன் இணைகின்றார் இலங்கை அணியின் புதுமுக வீரர்!  

Thursday, November 3rd, 2016

இங்கிலாந்தைச் சேர்ந்த பென்ரித் கிரிக்கெட் கிளப்பில் விளையாடுவதற்காக இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ ஒப்பந்தமாகியுள்ளார்.

இலங்கை அணியின் முதல்தர போட்டியில் கலக்கி வருபவர் பானுக ராஜபக்ஷ(25). இடது கை ஆட்டக்காரரான இவர் சிறந்த பந்து வீச்சாளர் மற்றுமின்றி துடுப்பாட்டக்காரர் என்று பன்முகத்திறமையை தன்னுள் வைத்துள்ளார்.

அண்மையில் இலங்கை அணி வீரர்கள்(A) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ராஜபக்ஷ 28 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். அது மட்டுமில்லாமல் அத்தொடரில் 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதுவரை மூன்று வித போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4500 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இவரின் ஆட்டத்திறனைக் கண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த பென்ரித் கிரிக்கெட் கிளப் அடுத்தாண்டு முழுவதும் தங்கள் கிளப்பில் சேர்ந்து விளையாடுவதற்கு ஓப்பந்தம் வாங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் இவர் வரும் ஏபரல் மாதம் நடைபெற உள்ள கவுண்டி போட்டியில் இருந்து அந்த கிளப்பில் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1-14

Related posts: