இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள பாகிஸ்தான் அணி !

Saturday, June 27th, 2020

கொரோனா தொற்றுறுதியான 10 வீரர்கள தவிர்ந்த ஏனைய 18 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணி குழாம் நாளையதினம் இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகளையும், மூன்று 20 க்கு 20 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜுலை 30 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிவரை பார்வையாளர்கள் அற்ற அரங்கில் இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான 10 வீரர்களுக்கு மூன்றாவது கட்ட பரிசோதனையில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களையும் தொடரில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: