இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணி!
Friday, July 22nd, 2016இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி,இங்கிலாந்தில் 50 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணி 1982, 1992, 1996, 2016 லாட்ஸ்சில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்று ஆசிய கண்டத்தை சார்ந்த அணிகளில் பாகிஸ்தான் அணி முதலிடம் வகிக்கிறது.இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய தொடருக்கு குமார் தர்மசேனவுக்கு வாய்ப்பு!
அணியை தெரிவுசெய்யும் உரிமையைப் பெற்ற ஹதுருசிங்க!
கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரங்கன ஹேரத்தின் தீர்மானம்!
|
|