இங்கிலாந்திற்கெதிரான ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஆஸியின் அதிரடி வீரர்!

Wednesday, January 10th, 2018

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து, அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் லின் விலகவுள்ளார்.

கிரிஸ் லின் பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்காக விளையாடி வருகின்றார். இதில் பெர்த் ஸ்கொச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும் போது, கிரிஸ் லின் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

 உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர்கள், கிரிஸ் லின்னின் உபாதை சிறிதாக இருந்தாலும், அவர் தொடர்ந்து விளையாடினால் உபாதை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். சிறிது நாட்கள் ஓய்விலிருப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் கிரிஸ் லின் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகிரிஸ் லின் அணியிலிருந்து விலகுவாராயின், அவரின் இடத்துக்கு அதிரடி துடுப்பாட்ட வீரர் கிளேன் மெக்ஸ்வல் அழைக்கப்பட அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. ஒருநாள் தொடர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.