இங்கிலாந்திடம் அடி வாங்கியது தொடர்பில் கோஹ்லியின் பதிவு!

Wednesday, August 15th, 2018

எங்களை விட்டு விலக வேண்டாம் என்ற உருக்கமான பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கோஹ்லி தலமையிலான இந்திய அணி, இங்கிலாந்து நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து 0-2 என்ற கணக்கில் தொடரை இழக்கும் நிலையில் உள்ளது.

அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியடைந்ததால், ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் கோஹ்லி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சில நேரங்களில் நாம் வென்றெடுக்கிறோம், மற்ற நேரங்களில் நாம் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் ஒருபோதும் எங்களை விட்டு விலக வேண்டாம், நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். தோல்வி தான் நிறைய கற்று தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: