ஆஸி. வீரர்களுக்கு கட்டுப்பாடு இல்லை-பயிற்சியாளர் லீமன்!

ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியவீரர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிவரும் செய்திகளை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் லீமன் மறுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் சகல துறைவீரர் ஸ்ரோக்ஸ் நபரொருவருடன் இரவு விடுதியொன்றில் கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆஷஸ் தொடருக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர்கள் தமது விடுதிகளைவிட்டு இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கு இங்கிலாந்து கிரிக்கெட்சபை தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இவ்வாறான தடை விதிக்கப்படவுள்ளது என்று வெளியான தகவலை லீமன் மறுத்துள்ளார்.
நிச்சயமாக அது போன்று தடை விதிக்கமாட்டோம். எங்களது வீரர்கள் சரியான வழியில் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது மட்டுமின்றி அவர்கள் ஒன்றும் சிறுவர்கள் கிடையாது. நல்ல அனுபவசாலிகள் என லீமன் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|