ஆஸி. தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Friday, June 1st, 2018

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

14 பேர் கொண்ட இந்த அணிக்கு இயான் மோர்கன் அணித்தலைவராக செயல்பட உள்ளார். அவருக்கு கை விரலில் முறிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விபரம்

 1. இயான் மோர்கன்
 2. மொயின் அலி
 3. பேர்ஸ்டோவ்
 4. ஜோஸ் பட்லர்
 5. அலெக்ஸ் ஹால்ஸ்
 6. லியாம் பிளங்கெட்
 7. ஜோ ரூட்
 8. பென் ஸ்டோக்ஸ்
 9. டேவிட் வில்லே
 10. கிறிஸ் வோக்ஸ்
 11. மார்க் வுட்
 12. ஜேசன் ராய்
 13. அடில் ரஷித்
 14. டாம் குரான்

ஒருநாள் தொடர் விபரம்

ஜூன் 13 – முதல் ஒருநாள் போட்டி, ஓவல் மைதானம்

ஜூன் 16 – இரண்டாவது ஒருநாள் போட்டி, கார்டிஃப் மைதானம்

ஜூன் 19 – மூன்றாவது ஒருநாள் போட்டி, டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம்

ஜூன் 21 – நான்காவது ஒருநாள் போட்டி, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானம்

ஜூன் 24 – ஐந்தாவது ஒருநாள் போட்டி, ஓல்டு டிராஃபோர்டு மைதானம்

Related posts: