ஆஸி. ஓபன்: பெடரர், நடால் நம்பிக்கை!
Friday, December 28th, 2018ஆஸி.ஓபன் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகின் மூன்றாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான பெடரர், தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவர் கூறியதாவது:
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸி. ஓபன் போட்டி கடுமையான சவாலாக இருக்கும். 37 வயதில் நான் இந்த வகையில் ஆடி வருவது வியப்பை தரும் என்பது மக்களுக்கு தெரியும். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல பல செயல்கள் நடக்க வேண்டும். இந்த சீசனும் எனக்கு சிறப்பாக அமையும் என நம்புகிறேன். கடந்த சில நாள்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன் என்றார்.
கடந்த செப்டம்பர் யுஎஸ் ஓபன் போட்டி அரையிறுதியில் மூட்டுவலி பாதிப்பால் விலகினார் ரபேல் நடால். அதன் பின் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. உலகின் இரண்டாம் நிலை வீரரான அவர் கூறியதாவது:
ஆஸி. ஓபன் போட்டிக்கு 100 சதம் முழு உடல்தகுதியுடன் பங்கேற்பேன். கணுக்காலில் அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அபுதாபியில் நடைபெறும் உலக டென்னிஸ் காட்சிப் போட்டியில் பங்கேற்கின்றேன். காயத்தால் பாதிக்கப்பட்டாலும் குணமடைந்து மீண்டும் மைதானத்தில் ஆடும் உத்வேகத்தில் உள்ளேன் என்றார்.
Related posts:
|
|