ஆஸி. அணியிலிருந்து முன்னணி வீரர்கள் பலர் நீக்கம்!
Thursday, February 7th, 2019இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து மிச்சல் ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார்.
அவருடன் மிட்சல் மார்ஸ், பீற்றர் சிட்ல் மற்றும் பில்லி ஸ்டேன்லேக் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஆரன் பின்ச் தலைமையிலான இந்த அணியில், Pat Cummins, Alex Carey, Jason Behrendorff, Nathan Coulter-Nile, Peter Handscomb, Usman Khawaja, Nathan Lyon, Shaun Marsh, Glenn Maxwell, Jhye Richardson, Kane Richardson, Marcus Stoinis, Ashton Turner, Adam Zampa, D’Arcy Short ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 24ம் திகதி இந்த தொடரின் முதலாவது 20க்கு 20 போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது.
27ம் திகதி பெங்களூரில் இரண்டாவது 20க்கு20 போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வரும் மார்ச் 2ம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
Related posts:
|
|