ஆஸி அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர்!
Friday, July 27th, 2018ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக டி20 தேர்வு குழுத்தலைவர் மார்க் வாக் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது லேங்கர் அப்பதவிக்கு நியமனமாகியுள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மேலாளர் பாட் ஹோவார்ட் கூறுகையில், ”ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு குழுத்தலைவராக லேங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கும் பயிற்சியாளராக விளங்கும் ஜஸ்டின் லேங்கர், உள்ளூர் போட்டியான பிக் பாஷ் லீக் தொடரையும், அத்தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றியும் அறிவதில் பெரும் ஆற்றமிக்கவர். மேலாளர்கள் மற்றும் பிக் பாஷ் லீக் தொடர் பயிற்சியாளர்களோடு இணைந்து ஜஸ்டின் லேங்கர் ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வார்” எனக் கூறினார்
Related posts:
|
|