ஆஸியின் கனவை தகர்த்தது இங்கிலாந்து !

Friday, July 12th, 2019

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாம் அரையிறுதி போட்டியானது பர்மிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் நாயணச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் திணற ஆரம்பித்தார். 49 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

43 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டார்க் வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மற்றொரு புறம் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஜேசன் ராய், 85 ஓட்டங்கள் எடுத்த போது, அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 20 வது ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் அந்த பந்து ராய் அருகே சென்றது. இதை விக்கெட் கீப்பர் கேரி கேட்ச் பிடிக்க, நடுவரிடம் ஆட்டமிழப்பு கேட்டகப்பட்டது. இதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட குமார் தர்மசேனா, ஆட்டமிழப்பு என கையை உயர்த்தினார். பின் ரீப்ளேவில் பார்த்த போது பந்து ராயின் துடுப்பிலோ அல்லது கிளவுசிலோ படாதாதது தெளிவாக தெரிந்தது.

அதன்பிறகு நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ஜோ ரூட் 49 ஓட்டங்களும், மோர்கன் 45 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம் 14ஆம் திகதியன்று நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற உள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

Related posts: