ஆஷஸ் தொடர் – முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு!

Tuesday, August 6th, 2019

ஆஷஸ் தொடரின் அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் இறுதி நாளான நேற்றைய தினத்தில் 398 என்ற  வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஒகஸ்ட் முதலாம் திகதி பெர்மிங்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

இந்த நிலையில் 398 என்ற வெற்றியிலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி  சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டிவ் ஸ்மித் தெரிவாகினார்.

Related posts: