ஆஷஸ் தொடர்: அபார வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா!

Tuesday, November 28th, 2017

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது

டபிரிஸ்பேனில் நடந்து வந்த இப்போட்டியில் முதலில் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 302 ஒட்டங்களும், பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 328 ஒட்டங்களும் எடுத்தது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 195 ஒட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்டஇதன் மூலமாக அவுஸ்திரேலியாவிற்கு 170 ஒட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை துரத்த ஆரம்பித்த டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி அவுஸ்திரேலியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டேவிட் வார்னர் 119 பந்துகளில் 87 ஒட்டங்களும், பேன்கிராஃப்ட் 182 பந்துகளில் 82 ஒட்டங்களும் எடுத்தனர்.இதன் மூலமாக அவுஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது

Related posts: