ஆலோசனை குழு நியமிக்க நடவடிக்கை – விளையாட்டுத்துறை அமைச்சு!

Thursday, July 18th, 2019

இலங்கை கிரிக்கட்டுக்கான ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் அணித் தெரிவுக் குழு மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவு போன்றவற்றுக்காக, ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதற்கு முன்னரும் விளையாட்டுத்துறை அமைச்சினால் இவ்வாறான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்த போதும், அவை அமுலாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: