ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

Friday, September 10th, 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது எனவும் ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் தலிபான் அரசாங்கம் தெரிவிக்கையில்,

விளையாட்டுகளில் பெண்கள் ஈடுபடுவது அவசியம் இல்லை. பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் அவர்களின் முகம் மற்றும் உடல் முழுவதுமாக மூட முடியாத சூழல் ஏற்படும். இதை ஏற்க முடியாது. இது ஊடகங்களின் காலம்.

பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படும். இதையும் ஏற்க முடியாது என தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் அந்நாட்டில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்று தலிபான் கூறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

Related posts: