ஆப்கானிஸ்தான் வெற்றி – தொடரில் இருந்து இலங்கை வெளியேற்றம்!

Tuesday, September 18th, 2018

2018 ஆசிய கிண்ண தொடரின் 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

குறித்த தோல்வியினால் இலங்கை அணி ஆசிய கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Related posts: