ஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் விக்கட் கப்பாளார் மொஹமட் சேசாட்டிற்கு எதிராக ஊக்க மருந்து பயன்பாட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் சேசாட்டிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 வயதான சேசாட் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளில் ஒன்றான clenbuterol ஐ, பயன்படுத்தியமை சோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மொஹமட் சேசாட் இதுவரையில் தலா 58 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டுவன்ரி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
300ஆவது வெற்றியை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!
2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் சந்தேகம்!
இலங்கை கிரிக்கட் அணியின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை!
|
|