ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ்.!

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்கள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அனைத்துவகை ஆட்டங்களிலும் சேர்த்து (டெஸ்ட்+ ஒருநாள்+T20) 9000 ஓட்டங்கள் கடந்தார்.ஒரு பங்களாதேஷ் வீரர் ஒருவர் அனைத்துவகை போட்டிகள் உள்ளடங்கலாக பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனை தமிம் இக்பால் வசமானது.
பதிலுக்கு 266 எனும் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் கடுமையான நெருக்கடியை கொடுத்தது.இறுதி 3 ஓவர்களில் 27 ஓட்டங்கள் என்று வெற்றியை நெருங்கும் வேளையில் ,பந்து வீச அழைக்கப்பட்ட தஸ்கின் அஹமெட் அந்த ஓவரிலெயே முக்கிய 2 விக்கெட்டுகளை தகர்த்தார்.
ICC T20 போட்டிகளின் போது முறையற்ற பந்துவீச்சு எனும் அடிப்படையில் போட்டித் தடைவிதிக்கப்பட்ட தஸ்கின் அஹமெட்டின் தடை ,நேற்றுத்தான் விலக்கி கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் இறுதி 6 பந்துகளில் 13 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் போட்டியில் 7 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.
Related posts:
|
|