ஆப்கானிஸ்தான் அணியும் எந்த அணியையும் தோற்கடிக்கும் – அஸ்வின்

Wednesday, July 19th, 2017

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கூட எந்தவொறு அணியையும் ஒருநாள் தோற்கடிக்கலாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுற்பந்து வீச்சளார் ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்துக்குட்டி அணியான சிம்பாப்வே அணி முன்னணி அணியான இலங்கை அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்ததன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் சிம்பாப்வே அணி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

விளையாட்டில் யாரும் தோற்கலாம். யாரும் ஜெயிக்கலாம். ஆப்கானிஸ்தான் அணி கூட யாரையும் ஒருநாள் தோற்கடிக்கலாம்” என கூறினார்.

அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஏ அணிகளுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: