ஆட்டத்தை போக்கை மாற்றிய தேனீ!

தென் ஆப்பிரிக்கா- அவுஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் பேட்டியில், தென் ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக்கை தேனீ ஒன்று கடிக்கவே, விக்கெட் எடுக்க தவறிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, சரியாக 30வது ஓவரில் தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் பந்து வீச, அதை அவுஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் அடிக்க வெளியே சென்றார்.
அவர் மிஸ் செய்த பந்தை குயிண்டன் டி காக் பிடித்தார், ஆனால் அவரால் விக்கெட் எடுக்க முடியாமல் பந்தை தவறவிட்டார்.
சரியாக விக்கெட் எடுக்க செல்லும் நேரத்தில் தேனீ கடித்தது கமெராவில் பதிவாகியுள்ளது, அதற்கு பின்பும் கூட தேனீ விடாமல் கைகளிலேயே இருந்ததால் மருத்துவ உதவி கோரப்பட்டது.
போட்டி முழுவதும் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருக்க, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Related posts:
சர்ச்சைகளை சாதனையாக்கியவர்- மஹேல!
தென்னாபிரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க!
டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
|
|