ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி!

Saturday, February 2nd, 2019

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.  

04 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோ பேர்ன்ஸ் 180 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும், பேட்டர்சன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 126 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related posts: