ஆசிய ஹாக்கி கிண்ணத்தை வென்றது இந்தியா!

Monday, October 31st, 2016

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடிய 3:2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று கிண்ணத்தை தனதாக்கியது.

2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது.

இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின் கணக்கை தொடங்கி வைத்தார். 38-வது நிமிடத்தில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர் அலி ஷான் கோல் அடித்து 2:2 என்று புள்ளிகளை சமநிலை படுத்தியபோதும், இறுதி காலிறுதி நேர ஆட்டத்தில் இந்தியாவின் வீரர் நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது.

முன்னதாக, அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை எதிர்த்து இந்தியா ஆடிய போட்டியானது 2:2 என்று சமநிலையில் முடிந்ததால், பெனால்டிக் முறைப்படி 5:4 என்ற கணக்கில் இந்தியா வெற்றியடைந்திருந்தது.பாகிஸ்தானும் மலேசியாவும் விளையாடிய அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

_92153311_94914cef-a9db-48c1-a08f-71107a4f2c18

Related posts: