ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

Tuesday, April 18th, 2017

ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் தாய்லாந்து கட்டத்தில் இலங்கையின் எரான் குணவர்தன வெற்றி பெற்றார்.இலங்கை இளம் வீரரொருவர் வெளிப்படுத்திய அதிசிறந்த ஆற்றல் இதுவாகும்.

06 கட்டங்களை கொண்ட ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்திய ஐப்பானின் டெட்சுயா புஜீடா முதலிடத்தைக் கைப்பற்றினார்.

இரண்டாமிடத்தை இலங்கையின் இளம் மோட்டார் பந்தய வீரர் எரான் குணவர்தன தன்வசப்படுத்திக் கொண்டார். ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் அடுத்த கட்டம் எதிர்வரும் 03 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இன்று காலை எரான் குணவர்தனவை வரவேற்கும் நிகழ்வில் இலங்கையின் நாமத்தை உலகுக்கு கொண்டு சென்ற மோட்டார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவவும் கலந்துக் கொண்டார்.

Related posts: