ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் கிரிக்கெட் !

Cricket-image_17183 Friday, April 21st, 2017

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது.போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

2018 ஆசியப் போட்டியில் 493 விளையாட்டுகள் 431-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் போன்ற விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஆசியப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிர்வாகிகள் கூறுகையில், இந்தோனேசிய விளையாட்டுகளுக்கும், ஒலிம்பிக்கில் உள்ள 28 விளையாட்டுகளுக்கும் வரும் 2018-ம் ஆசியப் போட்டிகளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.


சர்வதேச போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே பிரிவில் இடம்பெற செய்யாதீர்கள் ஐசிசிக்கு பிசிசிஐ புதிய ...
நல்லூர் ரோட்டறி கழகம் இரண்டாமிடம்!
ஆஸ்திரேலிய ஓபன்: விலகினார் டெல் போட்ரோ!
இலங்கை தொடருக்கும் ஆஸி தொடருக்கும் ஒற்றுமை உள்ளது என்கிறார் விஜய்!
வட்டுவாகலில் அதி நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்!
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!